ஜனநாயகத்தை எட்டி உதைக்கும் ராஜபக்ச – சிறிசேனா.வின் அரசியல் பயணத்தை நிறுத்த வேண்டும்

237

இலங்கையில் ஜனநாயகத்தை எட்டி உதைக்கும் ராஜபக்ச – சிறிசேனா.வின் அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அரசை நீக்கிய அதிபர் மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவை பிரதமராக அறிவித்ததை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி, பொது அமைப்புகள், மத தலைவர்கள் உள்ளிட்டோர் தலைநகர் கொழும்பில் தொடர்ந்து 6வது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே, மக்களின் வாக்குரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை எட்டி உதைத்துவிட்டு செல்லும் ராஜபக்ச – சிறிசேனாவின் அரசியல் பயணத்தை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், மேலும் ராஜபக்ச அரசுக்கு எதிராக10 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.