HCL நிறுவனத்தின் தலைவர் மாற்றம்..! புதிய தலைவர் யார்..?

466

இந்தியாவின் மிகமுக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்.சி.எல். இந்த நிறுவனத்தின் தலைவராக நீண்ட வருடங்களாக இருந்து வந்தவர் ஷிவ் நாடார்.

இவர் தற்போது தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், அவருக்கு பதில் அவரது மகள் ரோஷிணி நாடார் அப்பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 வயதாகும் ரோஷினி மல்ஹோத்ரா 2019 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 54ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement