அவர் ஒரு பீரங்கி நான் ஒரு ஏகே 47 – நவ்ஜோத் சிங் சித்து

284

இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தேர்தல் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து, இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் இன்று காலை தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார், அப்போது பேசிய அவர்

நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். மோடி, ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் செய்தாரா இல்லையா என்பது குறித்து நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று அவருடன் வாக்குவாதம் செய்ய நான் தயார். இதில் ஒரு வேளை நான் தோற்றால் அரசியலை விட்டு விலகவும் தயார்.

கடந்த 2014ம் ஆண்டு கங்கையின் புதல்வனாக மோடி வந்தார். இப்போது ரபேல் ஏஜென்டாக வெளியேற போகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறந்தவர் மற்றும் உயர்வானவர். அவர் பீரங்கி, நான் ஏகே 47.