தங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை

429

தினகரன் மீது குற்றம் சாட்டிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு அ.ம.மு.க.வை சேர்ந்த வெற்றிவேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தங்க தமிழ்ச்செல்வன் பலமுறை தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை, அவ்வப்போது அவரது சிந்தனைக்கு ஏற்ப அவர் இருப்பார்.

திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று பேசினார். இதை யார் ஒத்துக்கொள்வார்கள். வீழ்த்துவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அதை சொல்லலாம, இப்படி பேசினால் எப்படி என்று அவரிடம் பேசினேன்.

அதற்கு அவர் சரி நான் மாற்றி பேசுகிறேன் என்றார். இவர் ஒரு கருத்து சொல்வதோ அதை மாற்றிக்கொள்வதோ இயல்பு.

அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம் அவர் 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் அதனால் தான் என்று அவர் கூறினார்.

Advertisement