முரசொலி விழாவில் ரஜினி வேறு மாதிரி பேசி இருப்பார்

359

முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 80வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையவில்லை என கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்ட அவர், சட்டமன்ற தேர்தலிலும் இந்த மதச்சார்பற்ற கூட்டணி தொடர்வதே நாட்டுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நல்லது என்றார்.

இந்நிலையில் துக்ளக் 50ம் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினி “முரசொலி படிப்பவர்கள் திமுகவினராக இருப்பார்கள், துக்ளக் படிப்பவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள் என்ற ஒரு கருத்தை முன்வைத்தார், அந்த கருத்து தற்போது சர்ச்சையாகி வருகிறது, அவரின் இந்த கருத்து குறித்து உங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது முரசொலி விழாவில் கலந்துகொண்டிருந்தால் ரஜினி வேறு மாதரி பேசி இருப்பார் துக்ளக் என்று தெரிவித்தார், மேலும் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளி என்று கூறிய அவர் மற்ற பத்திரிக்கை படிப்பவர்கள் முட்டாள் என்று கூறவில்லை என்று தெரிவித்தார்.

Advertisement