180 மாணவிகள்..! ஒரே ஒரு HM செய்த வேலை..! போராட்டத்தில் குதித்த பெற்றோர்..!

856

தெலுங்கானா மாநிலத்தில் மெதக் என்ற பகுதியில் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை 180 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பள்ளியில் இருந்த ஆழ்குழாய் கிணறு வறண்டதால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் 3 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பள்ளியில் அதிக செலவு ஏற்படத் தொடங்கியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவிகளுக்கு நீளமாக கூந்தல் இருப்பதால் தான் தண்ணீர் செலவாகிறது. எனவே இந்த கூந்தலை வெட்டி விடுவோம் என நினைத்து 180 மாணவிகளின் கூந்தலையும் கிராப் கட் வெட்டியுள்ளார்.

மாணவிகளை பார்ப்பதற்கு பெற்றோர் வந்திருந்த போது, இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று தலைமை ஆசிரியரிடம் வாக்கு வாதம் செய்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.