தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் பிராண்டோ ஸ்கை லிப்ட் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சர் உத்தரவின்படி, தீயணைப்புத்துறையினர் மூலம் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.