இரவில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாதா..? எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..! சிறு தொகுப்பு..!

1226

நல்ல உணவுப்பொருட்கள் இது தான் என்று நம் எந்த உணவுப்பொருட்களையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. காலசூழலுக்கு ஏற்ப எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டாலும் அது உடலுக்கு பயன்களை தரும். ஒரு சிலர் தேவையற்ற நேரங்களில், தேவையற்ற பொருட்களை சாப்பிட்டு பின் அவதியடைகின்றனர்.

எந்த நேரத்தில் எந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை உள்ளது. அதன்படி சாப்பிட்டு வந்தால் உடல்நலம் ஆரோக்கியமுடன் இருக்கும்.

தற்போது அதுகுறித்து விரிவாக காணலாம்..,

1. தயிரை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் சுவாசக்குழாய்கள் பாதிக்கப்பட்டு, சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் தயிரை பகல் நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. செரிமான செயல்பாடுகள் எளிமையாக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

2. ஆப்பிள் பழத்தை காலை நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. ஆப்பிளில் இருக்கும் பெக்டின் மூலம், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கல்போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். ஆப்பிளை இரவில் சாப்பிடும் போது, அதில் இருக்கும் குறிப்பிட்ட சில அமிலங்கள் வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

3. பருப்பு வகைகளில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால், அதனை இரவு நேரங்களில் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்துகள் என்பது, சாப்பிட்ட உணவு எளிதாக சீரணமாக பயன்படும் சத்துக்களில் ஒன்று. ஆனால் பருப்பு வகைகளை காலை நேரங்களில் சாப்பிடக்கூடாது. அதில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால், சாப்பிட்ட உணவு மிகவும் வேமாக சீரணமாகிவிடும். இதனால் மிகவும் பசியுடன் இருந்து அதிக உணவுப்பொருட்களை சாப்பிட ஆரம்பித்துவிடுவோம். இதனால் நம் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

4. சர்க்கரைகள் அதிகம் இருக்கும் உணவுகளை நம் காலையில் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் அதிகம் கலோரிகள் உள்ளது. இதனால் நாம் காலையில் சுறுசுறுப்புடன் இருப்போம். மற்றும் அந்த அதிகப்படியான கலோரிகள் காலை நேரங்களில் கரைத்து விடும். ஆனால் இரவு நேரங்களில் நம் தூங்குவதில் அதிக நேரம் செலவிடுவதால் கலோரிகள் கரையாமல், உடலில் கொழுப்புகளாக தங்கி விடுகின்றன.

5. வாழைப்பழங்களை மதிய வேளையில் சாப்பிடுவது என்பது சிறந்தது. இது செரிமானத்திற்கு உதவும். மேலும் வாழைப்பழத்தில் உள்ள மூலப்பொருட்கள் நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆனால் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வரலாம். மேலும், வெறும் வயிற்றில், வாழைப்பத்தை மட்டும் சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

6. இறைச்சிகளில் அதிகம் புரோட்டீன் உள்ளது. இது உடலை வலிமைப்படுத்தி, தசைகளை மேம்படுத்தும். இறைச்சிகள் செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால், அதனை மதிய நேரங்களில் உட்கொள்வது சிறந்தது. ஆனால் இரவு நேரங்களில் இறைச்சி சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இறைச்சியில் இருக்கும் அதிகப்படியான புரோட்டீன், செரிமான மண்டலத்திற்கு மிகுந்த தீங்கை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு காலநிலைகளை பொறுத்து உணவுப்பொருட்களை சாப்பிட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு இணங்க ஆரோக்கியமுடன் அணைவரும் வாழ வேண்டும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of