அடேங்கப்பா.! அரிசி கஞ்சி சாப்பிட்டா இவ்ளோ நல்லதா..?

1194

அரிசி கஞ்சியின் அதீத நன்மைகள் :

நம் அனைவருக்கும் பிடித்த ஒரு சொல் என்றால் அது உணவே. நம் அனைவருக்கும் அனைத்து வகை உணவுகளும் பிடிக்கும் என்பதல்ல. வெவ்வேறு சிந்தனைகள் நமக்கு தோன்றி மறைவது போல் நம் விருப்ப உணவும் மாறுபடும். இதில் நம்மில் எத்தனை பேர் ஆரோக்கியமான உணவுகளை உண்கிறோம் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.Un Healthy Foods

உலகத்தில் மக்கள் அதிகமாக அரிசிவகை உணவையே உண்கிறார்கள். அந்த வகைகளில் ஒன்று தான் அரிசிக்கஞ்சி. இந்த அரிசிக்கஞ்சியானது  அதிக நன்மையை தரக்கூடிய ஒன்றாகவும், பலவித நோய்களை தீர்க்க கூடியதாகவும் இருக்கின்றது.

கிராமபுர மக்களின் காலை உணவாக இந்த அரிசி கஞ்சி இருப்பதால் இதனை அருந்திவிட்டு வயலுக்கு செல்லுபவர்கள் துளிகூட சோர்வின்றி மாலை வரை ஆரோக்கியத்துடன் வேலை செய்யமுடியும் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

Farmersஅரிசிக்கஞ்சியினை பருகும்பொழுது செரிமான அமிலங்கள் அரிசிக்கஞ்சியில் உள்ள கார்போஹைட்ரேட்டை நொதித்து உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கின்றது.

அரிசிக் கஞ்சியில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதனால் அதை பருகுபவர்களுக்கும் மலச்சிக்கல் போன்ற பிரச்சணைகள் இருக்காது. தேவையற்ற கழிவுகளும் அத்துடன் நீங்கி நம்முடைய செரிமான உறுப்புகளும் ஆரோக்கியமாகும்.

தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அரிசிக் கஞ்சியில் இருப்பதால் ஜுரம், காய்ச்சல் ஏற்பட்டவர்கள் சூடாக அரிசி கஞ்சி அருந்தினால் நோய் குறைவது மட்டுமில்லாது இழந்த சத்துகளையும் மீண்டும் பெறமுடியும்.

பசியின்மையை போக்கும் ஆற்றல் அரிசிக்கஞ்சியில் அதிகம் இருப்பதனால் அரிசிக்கஞ்சியுடன் சிறிது சீரகம் சேர்த்து  அருந்தினால் சாபிட்ட உணவும் வேகமாக  செரிமானமாகிவிடும். இதுமட்டுமில்லாது அரிசிக்கஞ்சியில் என்னற்ற நன்மைகள் உண்டு.

அரிசிக்-கஞ்சி

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of