“நீ மக்களின் எதிரி” செய்தியாளரை பார்த்து டிரம்ப் அவேசம்

59

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது சி.என்.என் தொலைக்காட்சியின் செய்தியாளர் அகோஸ்டா, ஆயுதங்கள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களை எப்படி ஊடுருவல்காரர்கள் என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், தன்னை அமெரிக்காவை ஆட்சி செய்ய விடுமாறு செய்தியாளரிடம் கூறினார்.

அதன் பின்பும் விடாமல் செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றதால் டிரம்ப் கோபம் அடைந்து கேள்வி எழுப்பியது போதும் அவரின் இருக்கையில் அமருமாரு செய்தியாளர் அகோஸ்டாவை வலியுறுத்தினார். ஆனால் அந்த செய்தியாளர் தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றதால் ஒரு கட்டத்தில் பதில் அளிக்க மறுத்து டிரம்ப் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

பின்னர் திரும்பி வந்த டிரம்ப் செய்தியாளர் அகோஸ்டாவை பார்த்து “நீ மக்களின் எதிரி”என்று விமர்சித்தார். இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி அந்த செய்தியாளருக்கு ரத்து
செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here