
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஹதாஸ்பூர் பகுதியை சேர்ந்த நபர், நகைக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, அவரது கடைக்கு வந்த ஒருவர், இனிமையாக பேசி, நண்பராகியுள்ளார்.
இதுமட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களிடமும் நெருக்கமாக பழகி வந்த இவர், தன்னிடம் மேஜிக் மணல் உள்ளது என்றும், இதனை சூடுப்படுத்தினால், தங்கம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய நகைக்கடை முதலாளி, 4 கிலோ மணலை பெற்றுக் கொண்டு, 50 லட்ச ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார்.
மணலை நெருப்பில் போட்ட பிறகே, தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த அவர், போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பலே திருடனை தேடி வருகின்றனர்.