தலைவர்கள் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை

112

பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அண்மை காலமாகவே தலைவர்களின் சிலை சேதப்படுத்தப்படுவது, தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம், சாலவாக்கத்தில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் சேதமடைந்து இருப்பதை கண்ட மக்கள், காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக வீரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of