சீனாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி

281

கடந்த ஒரு வார காலமாக சீனாவின் தெற்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்துக்கு உட்பட்ட 6 நகரங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தினால் 1300 வீடுகள் சேதமடைந்துள்ளன, 17 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளப்பெறுகினால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 12 பேரைக் காணவில்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of