தமிழக கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

369

தமிழக கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடல், இந்திய கடற்பகுதிகளில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும், கூறினார்.

இதனால், வரும் 15,16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும பாலச்சந்திரன் தெரிவித்தார். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் இன்று மாலைக்குள் கடல் திரும்ப வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.