10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

227

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 48மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

அடுத்த 24மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement