இமாச்சலப்பிரதேசம் மாநிலம் மாண்டி மாவட்டத்தில் கனமழை காரணமாக பியஸ் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் பாய்வதால், அங்கு பாதுகாப்பு கருதி போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டிய சூழலுக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
Advertisement