உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி

555

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். மழையால் ஷாஜகான்பூர், அமேதி ஆகிய பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். அவுரைய்யா மற்றும் அமேதி மாவட்டங்களில் தலா இருவரும், லக்கிம்புரி கிரி, ரேபரேலி மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என அம்மாநில மீட்புப்பணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement