கானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa

284

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானா நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆண்டுதோறும் மழை, வெள்ளத்துக்கு பலர் பலியாவது அண்மைக்காலமாக தொடர்கதையாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து பெய்த கனமழையின் எதிரொலியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக இயற்கை பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று தெரிவித்தனர்.

சுமார் 300 வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும் வீடுகளை இழந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of