குவைத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளக் காடாகின

227

மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் சூழ்ந்ததால் நோயாளிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.குவைத்தில் நேற்று6 மணி நேரம் விடாமல் பெய்த மழையால், Mahabula பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன.

முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. வெள்ளத்தில் வாகனங்கள் மிதந்து சென்றன. ஓட்டுனர்கள் எச்சரிக்கையுன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Al-Ghazhi பாலம் அருகே தண்ணீரில் சிக்கிய
ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

Farwaniya மருத்துவமனையின் உட்பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளதால், உள்நோயாளிகளும்,புற நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்குள் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது.

கனமழை இருந்தபோதிலும், சர்வதேச விமான நிலையத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட பகுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். குவைத்தில் பலத்த மழை காரணமாக இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here