தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழை பெய்யும்

565

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஸ்டெல்லா, தமிழகத்தின் இதர பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக கூறினார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of