சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

169

சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அவசியமான காரணங்கள் இன்றி வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், தி நகர், வளசரவாக்கம், அசோக்நகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of