நரகத்தின் வாசலா ? அல்லது இயற்கை நிகழ்வா ?

1690

உஸ்பகிஸ்தான் நாட்டின் அருகில் மத்திய ஆசியா நாடுகளில் ஒன்றாக திகழ்வது தான் துர்க்மெனிஸ்தான் என்ற நாடு. இந்த நாட்டில் தான் ஆராச்சியாளர்களை இன்றும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் ஒரு இடம் உள்ளது. துர்க்மெனிஸ்தான் நாட்டின் “கறக்கும்” என்ற பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள 226 அடி அகலமும், 98 அடி ஆழமும் கொண்ட அந்த “Hell’s Gate” என்று அழைக்கப்படும் நரகத்தின் வாயில்.

dessert

1971ம் ஆண்டு துர்க்மெனிஸ்தான் நாட்டை சார்ந்த நிலவியல் ஆய்வாளர் அனடோலி புஷ்மகின் என்பவரால் எண்ணெய் வளம் நிறைந்த பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. ஆனால் பூமியில் ஆழத்தில் இருக்கும் அந்த வளத்தை பயன்படுத்தும் முன்பு அப்பகுதியில் மேலிருக்கும் வாயுக்களை நீக்க முடிவு செய்தனர்.

வாயுக்களை நீக்கம் செய்யும் பணி நீண்ட காலம் எடுத்துக்கொண்டதால், தீயிட்டு அந்த வாயுக்களை விரைந்து அழிக்க முடிவெடுத்தனர். அவர்களின் கணக்கின்படி வெறும் ஒரு வார காலத்தில் அங்குள்ள வாயுக்கள் அனைத்தும் எரித்துவிடும் என்று கணக்கிட்டனர். ஆனால் அவர்களின் அந்த கணக்கு தவறியது.

dessert-2

ஆம், அவர்கள் தீயிட்ட அந்த இடம் சுமார் 47 ஆண்டுகளாக இன்று வரை எரிந்து கொண்டே இருக்கிறது. அங்குள்ள வாயுக்கள் 47 ஆண்டுகள் ஆனபிறகும் தீராமல் எரிந்து வருகிறது. ஆறிஞர்கள் இதற்கு விளக்கம் ஏதும் இன்றளவும் அளிக்கவில்லை. அந்த இடத்தை சுற்றியுள்ள மக்கள் அந்த இடத்திற்கு நரகத்திற்கு செல்லும் வழி “Hell’s Gate” என்று பெயரிட்டுள்ளனர்.

– லியோ (இணையதள அணி)

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of