சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு – மக்கள் கண்காணிப்பகம்

353

சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது, வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு என்று மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை அமைப்பான  மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன், சிபிசிஐடி போலீசார்,  கொலை வழக்கு பதிவு செய்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார்.

நீதித்துறை வரலாற்றில் சாட்சியம் அளித்த பெண்காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் பேசியது மிக முக்கியமான நிகழ்வு என்றும் ஹென்றி திபேன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக இருந்த அருண் பாலகோபாலன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பென்னிக்ஸ் – ஜெயராஜ் காவல்துறையினர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் காவல்துறையின் உச்சபட்சமான மனிதஉரிமை மீறல் என்றும் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார்.