“அனிஷாவும், நானும் காதலிக்கிறோம்”. வருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்

950

ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் எனப் பல முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தது பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என முன்பே கூறியிருந்தார்.

விரைவில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிவடைய இருக்கின்றன. எனவே அவரது திருமணம் பற்றிய பேச்சும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்த விஷால் அதில் எனக்கும்அனிஷா ரெட்டிக்கும் திருமண தகவல் உண்மை தான். இது காதல் திருமணம்.

vishal-lover

காதல் அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். திருமணம் சென்னையில் தான் நடக்கும். எனத் தெரிவித்துள்ளார்.

விஷால் திருமணம் செய்து கொள்ள இருக்கிற அனிஷா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது தந்தை விஜய் ரெட்டி ஒரு தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது.