கதாநாயகிகளின் 2018

1228

2018 தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காலக்கட்டமாக உள்ளது. பல நல்ல நல்ல திரைப்படங்கள் வந்தன. சினிமா ரசிகர்கள் வாரத்திற்கு 2 படம் பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டனர். ஒரு புறம் இளம் இயக்குனர்களும், பெரு நடிகர்களும் கலக்க, மறுபுறம் கதாநாயகிகளும் வெற்றி படங்களை குவித்து வந்தனர். அந்த பட்டியலை காண்போம் வாங்க…

ஜோதிகா வின் நாச்சியார்

இயக்குனர் பாலா அவர்களின் வெற்றி காலம் முடிந்தது அவர் ஒரே பாணியில் திரைப்படம் எடுத்து வருகிறார் என்ற விமர்சனங்கள் தாரை தப்பட்டை படங்கள் மூலம் வந்தது. அதை தொடர்ந்து திடீரென பாலா படத்தில் ஜோதிகா இணைகிறார் என்ற செய்தி வந்தது. முன்னதாக ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும் என்ற முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கும் எதிர்ப்பார்ப்புகள் உண்டாகின.  ஜோதிகா வுடன் ஜி.வி.பிராகாஷ் குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் அசிஸ்டென்ட் கமிஷ்னராக ஜோதிகாவின் சொந்த குரலில் பேசி, உடல்மொழி, நடிப்பு, வசன உச்சரிப்பு என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஜோதிகாவின் நடிப்பு திறன் மீண்டும் வந்துள்ளது என சினிமா வட்டாரங்களினால் பேசப்பட்டது.

கீர்த்தி சுரேஷ் ன் நடிகையர் திலகம்

நயன்தாரா, சமந்தா, தமண்ணா மட்டும் தான் நடிப்பார்களா? நானும் நடிகை தான் என மகா நடிகையாய் அவதாரம் எடுத்தார் கீர்த்தி சுரேஷ்.  தமிழிலும் தெலுங்கிலும்  உருவாக்கப்பட்டது தான் ‘நடிகையர் திலகம்’ . இந்த திரைப்படம் பழம்பெரும் நடிகை சாவித்திரி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தனர்.  இதில் நடிகையர் திலகம் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். இதில் நடிகை சாவித்திரியை கண்ணுக்கு முன் கொண்டு வந்து இருப்பார் கீர்த்தி சுரேஷ். தமிழில்  மட்டும் கொண்டாடப்பட்டு வந்த கீர்த்தி சுரேஷ் இப்போது தெலுங்கிலும் பேசப்பட்டு வருகிரார். நயன்தாராவிற்கு பின் தெலுங்கில் பேசப்பட்ட நடிகை என பெயரும் பெற்றார்.

நயன்தாரா வின் கோலமாவு கோகிலா

நான் இல்லாத 2018 பட்டியலா/ என போட்டி போட்டு பட்டியலில் இணைந்தார் நயன்தாரா. படத்தில் புற்றூநோயால் பாதிக்கப்பட்ட அம்மாவுக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் போதைப் பொருள் கடத்த துணியும் நடுத்தர குடும்ப பெண்ணாக அசத்தியிருப்பார்.  பாவாடை சட்டையில் சாந்தமான உடல் மொழியிலும், சில காட்சியில் ஹீரோயினிஸம் காட்டும் நயன்தாராவின் நடிப்பு சிறப்பு. இதில் யோகி பாபுவின் காமெடி டைமிங், அனிருத்தின் அசத்தலான பின்னனி இசை படத்தை வெற்றி பாதைக்கு கொண்டு சேர்த்தது.

சமந்தாவின் யூ டர்ன்

சமந்தாவின் வழக்கமான நடிப்பை தாண்டி நடிப்பில் சமந்தாவின் இன்னொரு பரிமாணத்தை இந்த திரைப்படம் கொண்டு சேர்த்திருப்பார். இதற்குமுன் நான் ஈ திரைபடத்தை சுமந்து சென்ற சமந்தா பல ஆண்டு கழித்து தன் முழு திறனை கொடுத்து யூடர்னை நகர்த்தி சென்றுள்ளார் படத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் சமந்தா, பின் துப்பறியும் ஒரு பெண்ணாக மாறுவார். ஒரு திரில்லர் கதையை சமந்தாவை விட யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என்றது போல் அசத்திருப்பார். படத்தில் கூடுதலாக ஆதி, ராகுல் ஆகியோர் நடித்திருப்பார்.

ஐஷ்வர்யா ராஜேஷ் ன் கனா

தமிழ் சினிமாவில் முதன் முதலாக விளையாட்டு துறையில்  பெண்கள் சாதிப்பதை மையப்படுத்தி வந்த முழு திரைப்படங்களில் இதுவும் ஒன்று முன்னதாக ‘இறுதிச்சுற்று’ வந்திருந்தது  தற்போது அந்த வரிசையில் வந்த இன்னொரு திரைப்படம் தான் ‘கனா’.

கிராமத்திலிருந்து வந்து கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கும் பெண்ணாக ஜஸ்வர்யா ராஜேஷ்நடித்திருப்பார். அப்பாவின் செல்ல மகளாகவும், அப்பாவின் விருப்பத்தை தன் விருப்பமாக மாற்றி பயணிக்கும் பெண்ணாகவும் , கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டு உள்ள பெண்ணாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். காக்கா முட்டை திரைப்படதிற்கு பின் எதார்த்தமான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மற்றும் படத்தில் விவசாயியாக சத்யராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார். சிவகார்த்திகேயனின் சிறப்பு வருகை கூடுதல் பலம்.

2018 ல் வெளிவந்த திரைப்படங்களை தாண்டி 2019 அதிக திரைப்படங்கள் வர இருக்கிறது. நயன்தாரா வின் ‘கொலையுதிர் காலம்’ , ‘ஐரா’ மற்றும் காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’ மற்றும் பல திரைப்படங்கள் வெளி வருமென எதிர்ப்பார்க்கலாம்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of