ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு – உயர்நீதிமன்றம்

387

சென்னை: ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர் உயர்நீதிமன்றத்தில், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடைக் கோரி மனு தாக்கல் செய்தார். இம்மனுவில் விதிகளை முறையாக பின்பற்றாமல், ஆன்லைனில் பட்டாசு விற்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் அதிகளவில் சீனப்பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக்கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன், இது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை போலீஸ் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ.,15க்கு ஒத்தி வைத்தனர்