சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு! தூக்குதண்டனை ரத்து செய்த உயர்நீதிமன்ற கிளை!

488

தேனியில் கடந்த 2014 டிசம்பர் மாதம், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொமை செய்து கொடூரமாக கொலை செய்து சிறுமியின் சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு சில மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.

பின்னர்,சுந்தர் ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.டி தொடர்ந்து இந்த வழக்கில், குற்றவாளிகள் மூவருக்கும் தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து கடந்த 2015ல் உத்தரவிட்டது.

இதையடுத்து, குற்றவாளிகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான இன்றைய விசாரணையில்,தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் மூன்று பேருக்கும்விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையைரத்து செய்து மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of