A.R.முருகதாஸ் வைத்த கோரிக்கை..! கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்..!

291

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக கூறி தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் ஏ.ஆர்.முருகதாசின் அலுவலகம் மற்றும் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால் பாதுகாப்பு கேட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்து வைக்க வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும். போலீசாரும் வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம்.

பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்பட வேண்டுமா?’ என்று கண்டன கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of