ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைக்கோரிய வழக்கு இன்று பிற்பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர வழக்காக விசாரிக்கிறது.

143
jactogeo-court

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு தடைக்கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், அரையாண்டு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் விதிப்படி வேலை நிறுத்தத்திற்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு மறுத்து விட்டது. பின்னர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி அமர்வும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மதியம் ஒரு மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here