தமிழக அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

222
madurai-high-court

மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆவதாகவும், அதில் பல கட்டடங்களில் பெரும்பாலானவை சேதம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே பள்ளிகளை ஆய்வு செய்து பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதைத் தொடர்ந்து பள்ளிகள் ஆய்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வருகிற 29-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here