கபாலீஸ்வரர் கோவிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரம் – விசாரணை நடத்த மூவர் குழு அமைப்பு

331

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டது குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலை விவகாரத்தை விசாரிக்க ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களின் இணை ஆணையர்கள், அறநிலையத்துறை ஆய்வாளர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏற்கனவே நடத்தி வரும் விசாரணையை தொடரலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் விசாரணை குறித்த அறிக்கைகளை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of