மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  சொத்து மற்றும் கடன் விவரங்களை தெரிவிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னைஉயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் தமிழக அரசும் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்கக்கோரி, சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு  நீதிபதிகள் என்.கிருபாகரன்,அப்துல் குத்தூஸ் முன் இன்று நடைபெற்றது.

அப்போது தீபக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கியதில் ஒன்னறை கோடி ரூபாய் செலுத்த நோட்டீஸ் வந்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து,  ஜெயலிதாவுக்கு எத்தனை சொத்துக்கள், கடன் எவ்வளவு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து வருமான வரித்துறை தான் சொல்ல முடியும் என்று தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத், இந்த வழக்கில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பிரதிவாதியாக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.  மேலும் வேதா இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 100 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கும் என்று தெரிவித்ததையடுத்து, இந்த வழக்கில் தமிழ் வளர்ச்சித் துறையையும்  சேர்க்க  உத்தரவிட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of