எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேனர்கள் வைக்க அனுமதி விண்ணப்ப ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

522

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களின் போது சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டதாகவும், அதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன்,ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து பேனர்கள் வைக்க அனுமதி கோரிய விண்ணப்பங்கள் தொடர்பான ஆவணங்களை வரும் 5ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைக்கப்பட்டது.