பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

309
child

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்பது தெடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தகள் காணாமல் போயினர். அந்த குழந்தைகளை கண்டுபிடிக்கக்கோரி எக்ஸனோரா அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கில் சமூக நலத்துறை இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தை காப்பகங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்பது தெடர்பாக அக்டோபர் 25ஆம் தேதி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.