போதையால் நடைபெறும் குற்றங்களுக்கு அரசு தான் பொறுப்பு? உயர்நீதிமன்றம்!

330

மதுவினால் நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு என்பது நிதர்சனமான உண்மை.

மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பொதுமக்களும், பெண்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இருப்பினும் மதுவிலக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில் மதுபோதையில் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுபோதையில் நடைபெறும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of