இமாச்சல் பிரதேச கனமழையில் சிக்கிய 50 ஐ.ஐ.டி. மாணவர்கள் பத்திரமாக மீட்பு

631

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழையில் சிக்கிய 50 ஐ.ஐ.டி. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ரூர்கே ஐ.ஐ.டி.யில் இருந்து லகுல் மலைப் பகுதிக்கு பயிற்சிக்கு சென்ற போது காணமல் போன 50 மாணவர்களை இந்திய விமானப்படை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisement