இந்தி திணிப்பு ! போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK

403

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ல் நடைபெற இருந்த தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்தி திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் தெரிவித்தோம். மத்திய அரசு எந்த வகையிலும் இந்தியை திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement