அரசு பேருந்தில் இந்தி திணிப்பு – கனிமொழி கடும் கண்டனம்

500

தமிழக மக்களின் வரி பணத்தில் புதிய பேருந்துகளை வாங்கிவிட்டு தமிழுக்கு இடமில்லை என கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்துகளில் EMERGENCY EXIT ( அவசர வழி) உள்ளது. அந்த அறிவிப்பில் தமிழில் இல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கனிமொழி டுவீட் செய்துள்ளார். 

அந்த பதிவில் “தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.  என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.