இந்தியில் ரீமேக் ஆகும் ஒத்த செருப்பு

273

சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. புது முயற்சியாக இப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார்.

இப்படத்தை கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.

இது குறித்த அறிவிப்பை பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது:  ஒத்த செருப்பு படத்தை இந்தியில் நவாசுதீன் சித்திக்கை வச்சி செய்ய இருக்குறோம்.

அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார். நவாசுதீன் சித்திக் ஏற்கனவே ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of