இந்தி மொழி ஆசிரியர்கள்! பாரபட்சம் காட்டும் மத்திய அரசு!

421

மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையின் வரைவை வெளியிட்டது. இதில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்ற அம்சம் இருந்தது. இதற்கு தமிழ்நாடு உட்பட தென்னிந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்தி கட்டாயம் என்ற அம்சம், புதிய கல்விக்கொள்கையில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட் அறிவிப்பில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமிக்க நிதி ஒதுக்கப்படவில்லை.

மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு 256 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அது 100 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தி ஆசிரியர்களை நியமிக்க மட்டும் 50 கோடி ரூபாய் ஒதுக்கியதால், மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.