அவர் செய்த பணிகள் டூர் செல்வதும், கருத்து சொல்வதும்தான்.

449

தலைநகர் புது டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் புது டெல்லியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘டெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மியின் ஆட்சி செயல் திறனற்று இருக்கிறது. மேலும் கெஜ்ரிவால் ஆட்சியில் சிறந்த செயல்கள் ஏதும் செய்யவில்லை. அங்கு ஒர் அராஜக ஆட்சி நடைபெறுகிறது’ என கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, கருத்து சொல்வது போன்ற பணிகளில் தான் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதை தவிர எவ்வித பணிகளும் செய்து முடிக்கவில்லை. இதன் காரணமாகவே பொய்யாக தேசியவாதம் எனும் பெயரில் வாக்கு சேகரித்து வருகிறார் என்று கூறினார்.

Advertisement