மெளனமொழியின் தந்தை எபீ – யின் வரலாற்று பார்வை

315
Charles-Michèle-de-l'Epée

காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் சைகை மொழியின் உலக தந்தை என்று போற்றப்படும் சார்ல்ஸ்-மைக்கேல் டி லீ எபீ வின் 306 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பிரஞ்சு நாட்டை பிறப்பிடமாக கொண்ட மைக்கேல் டி லீ எப்பி 1712 ஆம் ஆண்டு பிறந்தார், சட்ட படிப்பை முடித்த அவர், வழக்கறிஞருக்கான உரிமை பெற தவறியதால் அவரின் வாழ்க்கை சமூக மக்களுக்காக திரும்பியது, ஏழை எளியோர்க்கு உதவி செய்தல், இயலாதோர்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவந்தார் எபீ, பின்னர் ஒரு செய்கை மொழியை பயன்பட்டுத்தி இளம் காது கேளாதோர் பெண்களுடன் பேச தொடங்கினார்.

பின்னர் இவர்கள் மீது ஏற்பட்ட பற்று காரணமாக பிறப்பால் குறை உள்ள மக்களுக்காக ஒரு மொழியை உருவக்க வேண்டும் என்று முடிவு செய்தார் எபீ , அதை தொடர்ந்து 1760 ஆம் ஆண்டு இலவச சைகை மொழி பள்ளியை நிறுவினார், இதன் மூலம் காது கேளாதவர்கள் மொழிக்கு தகுதியுடையவர்கள் என்று அவர்களுக்கு நம்பிக்கையை அளித்தார்,

இவர்களாலும் அனைத்து கல்வியையும் பெற முடியும் என்று உலகத்திற்க்கு சைகை மொழியை அறிமுகப்படுத்தினார் எபீ, பின் மொழி தெரியாத ஒரு இனமாக காதுகேளாதோர்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக பிரஞ்சு மொழியில் சைகை மொழிகளை உருவக்கினார், அவரின் சைகை மொழி மூலம் காதுகேளாதோர் முதல் முறையாக நீதிமன்றத்தில் தங்கள் விவாதங்களை வாதிதட உதவியாகவும்,

தங்களுக்கு பாதுகாப்பாகவும் எப்பியின் சைகை மொழி அமைந்தது, பின்னர் எப்பியால் எழுத்ப்பட்ட methodical signs என்ற புத்தகத்தின் மூலம் சைகை மொழிகளை கற்பிக்க மிகவும் எளிதாக அமைந்தது, 18 ஆம் நூற்றாண்டில் மனித வர்க்கத்தில் காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களை குறை உள்ள மனிதர்கள் என்று பேசி வந்தவர்களுக்கிடையே சைகை மொழியின் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர் தான் இந்த சார்ல்ஸ்-மைக்கேல் டி லீ எபீ.

இவர் உருவாக்கிய மொழியை தொடர்ந்து அமெரிக்க போன்ற மேலே நாடுகளில் சைகை மொழிப் பள்ளி தொடங்கப்பட்டது, அது மட்டுமல்லாது தேசிய சட்டமன்றம் எப்பியை “மனிதகுலத்தின் பயனாளியாக” அங்கீகரித்தது, இதன் மூலம் டி லீ எபீ இன்று காதுகேளாதோர் கல்விகளின் தந்தையர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

மூன்று தலைமுறைகளுக்கு முன்னரே, மனித வர்க்கத்தில் பிறவி குணம் என்றாலும் கூட அதை வாழ்வியல் நடைமுறையாக, அவர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக சிந்தித்து செயல்பட்ட ஒரு மனிதநேயர் எபீ பிறந்த தினம் இன்று என்பதை நினைவில் கொண்டு, நம் நடைமுறையிலும் கொள்வோம்.

– எம். ஜாபர் சாதிக்