“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..! சிறப்புத்தொகுப்பு..!

2142

தங்களது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தும் விதமாக வெடிக்கப்படுவது பட்டாசு. தற்போது, இந்த பட்டாசு உருவான வரலாறு குறித்து விளக்கமாக பார்ப்போம்..

தமது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தும் விதமாகவே உலகின் சில நாடுகளில் பட்டாசுகளும், வானவெடிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பட்டாசுகள் முதன்முதலில், சீனாவில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள். சீனாவில் சமையலுக்கு, பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

அவ்வாறு ஒரு முறை இந்த உப்பை பயன்படுத்தும்போது, அது தவறுதலாக நெருப்பில் விழ, சத்தம் எழுந்துள்ளது. இந்த தற்செயலான நிகழ்வே, பட்டாசு கண்டுபிடிப்பதற்கு முக்கிய காரணமாகவும் இருந்துள்ளது. பல வண்ணங்களில் வெடிக்கும் பட்டாசுகளானது, சீனாவின் சாங் பேரரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

லிடியான் என்னும் சீன துறவியின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பட்டாசுகள், தீய சக்திகளை பட்டாசின் பயங்கர சப்தம் விரட்டியடிக்கும் என்று சீனர்களின் நம்பிக்கையாக இருந்தது.

மேலும், சீன மொழியில் பட்டாசுகளை, ஹனாபி என்று அழைத்தனர். அதாவது, நெருப்பு மலர் என்று பொருள். இவ்வாறு இருக்க, சீனர்கள் சிலர் இந்தியாவின் கொல்கத்தாவில் 1922-ல் தீப்பெட்டி தொழில் செய்து வந்தனர்.

இதையடுத்து சிவகாசியில் இருந்த ஐரோப்பியக் கிறிஸ்தவப் பாதிரியார்கள் மூலமாக சிலர் தீப்பெட்டி தொழிலைக் கற்க கல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தொழிலை கற்றுக்கொண்டவர்கள், மீண்டும் சிவகாசிக்கு வந்து, 1928-ல் தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கினார்கள்.

அதன்பிறகு, 1968-ஆம் ஆண்டு முதல் பட்டாசு தொழிற்சாலை சிவகாசியில் தொடங்கப்பட்டது. 1899 ல் நடைபெற்ற சிவகாசி கலவரம் குறித்த ஆய்வுகளை கற்றால் இந்த தொழில் இங்கு அமைந்த காரணத்தையும் அறியலாம். சீனர்கள் மூலமாக தொடங்கப்பட்ட இந்த பட்டாசு கலாச்சாரம், ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்கள் என்று கடைசியாக இந்தியர்கள் வசம் வந்தது.