இந்தியாவின் முதல் மகாத்மா புலே

803

இந்தியாவின் சமூக சீர்தீருத்தவாதியும் சமூக புரட்சியின் தந்தை என்று பத்தென்பதாம் நூற்றாண்டில் பறை சாட்டப்பட்டவர் தான் கோவிந்தராவ் புலே, நாட்டில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பல புரட்சிகளையும், பகுத்தறிவு சிந்தனை கொண்ட நிகழ்வுகளையும் நடத்திய சீர்திருத்தவாதி புலே மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 1857 ஆம் ஆண்டு பிறந்தார், பின்னர் தனது ஒன்றாம் வயதில் தயை இழந்து பின் 13 வது வயதில் மணமுடித்தார்.

பள்ளி பருவத்தில் பல வரலார்று நூல்களை படித்து வந்த புலே தாமஸ் பெய்னின் எழுதிய ‘ரைட்ஸ் ஆஃப் மேன் என்ற நூல் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் சமுகத்தில் நடக்கும் சாதிய கொடுமைகளை கண்டு புலே பெரும் கவலை கொண்டார். அதன் பிறகு தனிநபர் சுதந்திரம், சமத்துவம் எங்கும் பரவ வேண்டும் என்ற கொள்கையை வைத்து, சமூகத்தில் மனித உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று முழங்கினார்.

மனித சமுதாயம் விழிபுணர்வு பெறுவதற்கு கல்வி மட்டுமே சரியான வழி என்பதை உணர்ந்து, கல்வியை பரப்பும் பணியை தொடங்கினார். கவிநயமும், எழுத்தாற்றல் பெற்றிருந்த புலே திருதிய ரத்னா ‘, குலாம்கிரி, போன்ற நூல்களை எழுதி வெளி கொண்டு வந்தார்.

அதன் பின்பு 1851 ஆம் ஆண்டு ஒரு பெண்களுக்கான பள்ளியை தொடங்கி பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த மிகப்பெரும் உந்துகோல் சக்தியாக விளங்கினார், இவரின் சீறிய பணியை பார்த்த அரசாங்கம் புலேவை தொடர்ந்து அரசு பள்ளிகள் தொடங்கியது. தனது தாய் மொழிகல்வியை கட்டாய பாடமாக்குவதற்கு முனைபுடன் திகழ்ந்தார் புலே.

அதன் பின்னர் சமுகத்தில் பெரிதும் பரவி கிடந்த தீண்டாமை உள்ளிட்ட சாதிய கொடுமைகளை ஒழிப்பதற்கு, பாகுபாடுகளுக்கு எதிரான இயக்கம், தலித் இயக்கம், பெண் கல்வி இயக்கம், விவசாயிகளுக்கான இயக்கம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கம் என இயக்கங்களை தொடங்கி சமூகத்தை சீர்திருத்த போராடினார். அதன் பின் இவரின் உத்வேகமான சமூக சீர்திருத்த பணிகளுக்காக 1988 ஆம் ஆண்டு மகாத்மா பட்டம் பெற்றார், இதன் மூலம் நாட்டின் முதல் மகாத்மா என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாகப் போற்றப்பட்ட கோவிந்தராவ் புலே தனது 63 வது வயதில் 1890 நவம்பர் 28 ஆம் நாள் காலமனார்.

இந்திய தேசம் விடுதலைக்கு முன்னரே மனித சமுகத்தில் பின்னிபிணைந்து காணப்பட்ட சாதிய கொடுமைகளுக்கும், தீண்டாமைக்கும் எதிராக போரடி, மனித சமுதாயம் விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக திகழ வேண்டும் என்று போரடி மறைந்த கோவிந்தராவ் புலேவை இந்த நாளில் நினைவு கூர்ந்து தெரிந்துகொள்வோம்.

-எம். ஜாபர் சாதிக்