நகைச்சுவை நாயகன் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு பார்வை

1548

தமிழக திரையுலகின் கலைவாணரும், திரைப்பட முண்ணனி நகைச்சுவை கலைஞருமான என்.எஸ் கிருஷ்ணன் 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கண்ணியாகுமரி மாவட்டம் ஒழுகனச்சேரியில் பிறந்ததார்.

ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அவர், தனது கலையுலக வாழ்கையை சாதரண ஒரு வில்லுப்பாட்டு கலைஞராக ஆரம்பித்தார். அதன் பின்னர் கலை உலகில் அதிக ஈடுபாடு கொண்ட என்.எஸ் கிருஷ்ணன் நாடக துறையில் நுழைந்து பின் சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார்,

தமிழ் திரையுலகம் வளர்ச்சி கண்டு வந்த போது என்.எஸ் கிருஷ்ணன் தன்னை முழுவதுமாக தமிழ் திரைப்பட துறையில் இணைத்து கொண்டார். 1936 ஆம் ஆண்டு வெளிவந்த “சதிலீலாவதி” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் அதன் பின் திரைப்பட துறையில் முண்ணனி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

என்.எஸ் கிருஷ்ணன் சொந்தமாகவே வாசனங்களை எழுதி அதையே திரைப்படங்களில் பேசி நடிக்கும் ஆற்றல் கொண்டவர், இதன் மூலம் “பைத்தியகாரன், நல்ல தம்பி, அமரகவி” உள்ளிட்ட ஏறத்தாழ 150 திரைப்படங்களில் தனது சொந்த வசனங்களை கொண்டு நகைச்சுவை நடிப்புகளை வெளிகாட்டியுள்ளார் என்பது அவரின் கலை பண்பின் பெருமையாகும்,

நகைச்சுவையை சினிமா, காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்து தனது சொந்த குரலில் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.

சமூகத்தில் திரைப்படம் மூலம் மக்களுக்கு தீண்டாமை, மதுவிலக்கு, சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவாக எடுத்துக் கூறி தந்தை பெரியாரின் நிலைபாட்டை பிரதிபலித்தவர். காந்திய வழிகளிலும் பற்று கொண்ட என்.எஸ் கிருஷ்ணன் காந்தியடிகள் மறைவிற்கு பின் அவரது நினைவை போற்றும் வகையில் தனது சொந்த செலவில் அவரது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத் தூண் எழுப்பினார்.

திரைப்பட உலகின் மூலம் சமூக மக்களுக்கு சமூக சீர்திருத்த கருத்துக்களை கொண்டு சேர்த்த என். எஸ் கிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 நாள் தனது 49 வது வயதில் காலமானார், பின்னர் இவரது கலை புகழை போற்றும் விதத்தில் தமிழ்நாடு அரசு கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியது.
நகைச்சுவையோடு நல்ல கருத்துகளை கூறி சிந்திக்க தூண்டிய கலைவாணர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் அவர் நடிப்பும், கருத்து நிறைந்த நகைச்சுவைகளும், நம் மண்ணிலும், மனதிலும் நீங்கா நினைவாக நிலைத்து கொண்டு தான் இருக்கிறது.

-எம். ஜாபர் சாதிக்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of