ஷீலா தீட்சித் ! கடந்து வந்த பாதையும் செய்த சாதனையும் | History of Sheila Dixit

498

ஷீலா தீட்சித், பஞ்சாப் மாநிலத்தில் காபுர்தாலா என்ற இடத்தில் 1938ம் ஆண்டு பிறந்தவர். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை புதுடெல்லியில் முடித்தார், இவர் தத்துவத்திற்கான முனைவர் பட்டம் பெற்றவர்.

சுதந்திர போராட்ட தியாகியான உமாசங்கர் என்பவற்றின் மகன் வினோத் என்பவரை மணமுடித்தார். இவர்களுக்கு சந்தீப் திக்ஷித் என்ற மகனும், லத்திகாசையத் என்ற மகளும் உள்ளனர்.

Sheela

ஒரு காங்கிரஸ் நிர்வாகியாக தனது வாழ்க்கைய தொடங்கிய ஷீலா, 1984ம் ஆண்டு முதல் 1989ம் வருடம் வரை உத்தரப் பிரதேசம், கானூஜ் மக்களவை தொகுதியின் பிரதிநிதியா இருந்தார்.

அதே போல 1984ல் இருந்து 1989 வரை ஐந்து ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். காங்கிரஸ் செயற்குழுவின் தில்லி பகுதித் தலைவராக பணியாற்றிய இவர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தார்.

1970களின் தொடக்கத்தில் அப்போதைய டெல்லி நகரத்தில் working women’s hostel என்று அழைக்கப்படும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான இரண்டு விடுதிகள் உருவாக இவர் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

sheela-dixit

அதுமட்டுமின்றி உத்தரப் பிரதேசத்தில் , பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை அழிக்க நடத்தப்பட்ட போராட்டத்திற்கு தலைமை தாங்கி இவரும் இவரோடு போராட்டத்தில் ஈடுபட்ட 82பெரும் கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரதிநிதியாக பெண்களின் நிலைக்கான ஐ.நா (U.N.) ஆணையத்தில் ஐந்து ஆண்டுகாலம் பணிபுரிந்த இவர் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.

மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை கேரள மாநிலதின் ஆளுநராகப் பணியாற்றினார், கடத்த சில காலத்திற்கு முன்பு வரை டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

shila-dixit

கடந்த சில காலமாகவே இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை தன்னுடைய 81 வயதில் இயற்கையெய்தினியார்.

உண்மையில் இவரின் இழப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சியின் தொண்டர்களுக்கும் ஒரு மிக பெரிய இழப்பு என்பது மிகையில்லை.

பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்கள் மட்டும் பல பிரபலங்கள் அவரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of