டிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,!

3198

இன்றைய இளைஞர்கள் பல்வேறு இணையதள விளையாட்டுக்களுக்கும், செயலிகளுக்கும் அடிமையாகி வருகின்றனர். இதனால் பலர் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்கு நகரும் ஆபத்து அதிகரித்து வருகிறது. தற்போது இதுபோன்ற செயலியான டிக்-டாக் குறித்து விரிவாக காணலாம்..,

டிக்-டாக் என்றால் சீன மொழியில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சத்தம் என்று பொருள். அதாவது Vibrating Sound என்று அர்த்தம். இந்த செயலி முதன்முதலில் Musically என்று ஆங்கில பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பின் சில பிரச்சினைகளின் காரணமாக டிக்-டாக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த டிக்-டாக் செயலி முதன்முதலில் சீனா நாட்டில் பைட்டேன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் கடந்த 2016-ஆம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த செயலியின் மோகம் அதிகரிக்க அதிகரிக்க உலகத்தின் முக்கிய நாடுகளில் கொண்டு வரப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட ஒரே வருடத்திலேயே இந்த செயலி, பல முன்னணி செயலிகளுக்கு போட்டியாக அமைந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக, அக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக் முதலிடத்தை பிடித்தது.

இதன் மோகம் செட் வேகத்தில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த நிலையில் இந்தியாவிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த செயலியில் வீடியோக்களை வெளியிட தொடங்கியவர்கள் இந்தியாவில் பிரபலமானதை தொடர்ந்து, பலரும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தனர்.

இதுதான் இந்தியாவில் டிக்-டாக் செயலியின் வளர்ச்சிக்கு ஆணி வேராக அமைந்தது. இதனைத்தொடர்ந்து பலரும் இந்த செயலியை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக ஆரம்பித்தனர். இதற்கிடையே பல குற்றச்சம்பவங்கள் இந்த செயலியின் நேர்முக மற்றும் மறைமுக காரணத்தால் ஏற்பட்டது.

இதனால் பலரும், இதற்கு எதிர்ப்புக்குரல் எழுப்பினர். ஆனாலும், இந்த செயலியின் மோகம் குறைந்தபாடில்லை. தமிழக அரசின் சார்பில் இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. பின்னர், இந்த செயிலியில் பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் தற்போது டிக்-டாக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 12 கோடி பேர் டிக்-டாக் செயலிக்கு அடிமையாக உள்ளனர் என்று பகீர் தகவல்  வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற செயலிகளுக்கு இளைஞர்கள் அடிமையாவதை நிறுத்தும் வரை குற்றம்சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை…

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of