HIV நோய் – ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு – முதல் வெற்றி கண்டு சாதனை..!

1566

அமெரிக்காவில் எலியை தாக்கிய எச்ஐவி கிருமியை அழித்து, ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். எச்ஐவி.யால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு தற்போது வரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. ஏஆர்டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை, நோய் தொற்றில் இருந்து முழுவதுமாக காப்பாற்றாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீட்டித்து, அவர்கள் இயல்பாக வாழ்வதற்கு வழிவகை செய்கிறது. இந்த கிருமியை அழிக்கும் மருந்தை கண்டு பிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எலியில் உடலில் எச்ஐவி கிருமியை அழித்து, அமெரிக்காவின் நெப்ரஸ்கோ பல்கலைக் கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த கிருமியால் பாதிக்கப்பட்ட எலிக்கு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியது.

இதன் மூலம், எலியின் மரபணுவில் இருந்து எச்ஐவி கிருமி அகற்றப்பட்டுள்ளது. எச்ஐவி.யால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணுக்களை மாற்றி அமைப்பதே, இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும். இதனால், எச்ஐவி நோய்க்கு தீர்வு காண்பதில் கிடைத்த முதல் வெற்றியாக இது கருதப்படுகிறது.