திருமணத்திற்கு முன்பு “டெஸ்ட்” கட்டாயம்..? அரசின் அதிரடி திட்டம்!

1253

இன்னும் முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்களில் மிகவும் முக்கியமான நோய் எய்ட்ஸ். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவா சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பது பின்வருமாறு:-

“கோவாவில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு தம்பதிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்குவதே திட்டம்.

கடலோர மாநிலத்தில் சோதனையை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை கோவா சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது.

இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது. மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்”

என கூறினார்.