அரையிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா ஜோடி | Hobart International

483

இந்தியாவை பொறுத்தவரை டென்னிஸ் போட்டிகளில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தவர் சானியா மிர்சா, டென்னிஸ் போட்டிகளில் பல வெற்றிகளை குவித்த சானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இஷான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக போட்டிகள் எதிலும் பங்குகொள்ளாமல் இருந்த சானியா மிர்சா தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார். ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் தற்போது, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட சானியா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து நேற்று, இரட்டையர் முதலாவது சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோவை (ஜப்பான்) எதிர் கொண்டு வென்றார்.

nadiia-kichenok

இந்நிலையில், இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் கால் இறுதி போட்டியில், அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை சானியா ஜோடி நேற்று எதிர்கொண்டு விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of